| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 873 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 28... | தெவ்வர்; நீயே, புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும், பெரும! நின் செல்வம்; ஆற்றாமை நிற் போற்றாமையே. |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுமொழிக்காஞ்சி) அவனை அவர் பாடியது. (சோழன் நலங் கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது). | |
| 29 | அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்த நூல் பெய்து, புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, 'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள், பற்றா மக்களின் பரிவு முந்துறுத்து, கூவை துற்ற நாற்கால் பந்தர்ச் சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! இசைப்புறன் ஆக நீ ஓம்பிய பொருளே! |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுமொழிக்காஞ்சி) அவனை அவர் பாடியது. (சோழன் நலங் கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது). | |
| 30 | செஞ் ஞாயிற்றுச் செலவும், அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்று இவை சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, களிறு கவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட யாங்ஙனம் பாடுவர், |