| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 874 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 30... | புலவர்? கூம்பொடு மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் இடைப் புலப் பெரு வழிச் சொரியும் கடற் பல் தாரத்த நாடு கிழவோயே |
| திணை: பாடாண் திணை; துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது. (சோழன் நலங் கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது). | |
| 31 | சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, உரு கெழு மதியின், நிவந்து சேண் விளங்க, நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாயே; நுதி முகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; 'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், 'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, குண கடல் பின்னது ஆக, குட கடல் வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, வலமுறை வருதலும் உண்டு' என்று அலமந்து, நெஞ்சு நடுங்கு அவலம் பாய, துஞ்சாக் கண்ண, வடபுலத்து அரசே. |
| திணை: வாகை; துறை: அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம். சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் பாடியது. | |
| 32 | கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? 'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, மாடமதுரையும் தருகுவன்; எல்லாம் பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து இத் தண் பணை நாடே. |
| திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியை கோவூர்கிழார் பாடியது. | |
| 33 | கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் |