| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 877 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 36... | செய் கழங்கின் தெற்றி ஆடும் தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் சிலைத் தார் முரசம் கறங்க, மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
| திணை: வஞ்சி; துறை: துணை வஞ்சி. அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது. | |
| 37 | நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, வேக வெந் திறல், நாகம் புக்கென, விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், சினம் கெழு தானை, செம்பியன் மருக! கராஅம் கலித்த குண்டு கண் அகழி, இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், 'நல்ல' என்னாது, சிதைத்தல் வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
| திணை: வாகை; துறை: அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம். கருவூர் முற்றியிருந்தானை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. | |
| 38 | வரை புரையும் மழ களிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல, விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின் நிழற் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் பொலம் பூங்காவின் நல் நாட்டோரும் செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |