| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 878 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 38... | ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், நின் நாடு உள்ளுவர், பரிசிலர் - ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
| திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி. அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது. | |
| 39 | புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! யாங்கனம் மொழிகோ யானே - ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி, மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, வாடா வஞ்சி வாட்டும் நின் பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி). அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. | |
| 40 | நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் ஓம்பாது கடந்து அட்டு, அவர் முடி புனைந்த பசும் பொன் நின் அடி பொலியக் கழல் தைஇய வல்லாளனை; வய வேந்தே! - யாமே, நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க, புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்று கண்டாங்குக் காண்குவம் - என்றும் இன்சொல் எண் பதத்தை ஆகுமதி - பெரும! ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
| திணை அது; துறை: செவியறிவுறூஉ. (பாடாண்திணை) | |
| 41 | காலனும் காலம் பார்க்கும்; பாராது, வேல் ஈண்டு தானை விழு |