| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 879 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 41... | மியோர் தொலைய, வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! திசை இரு - நான்கும் உற்கம் உற்கவும், பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும் வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், கனவின் அரியன காணா, நனவில் செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங் கலக்குற்றன்றால் தானே - காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவின் செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
| திணை: வஞ்சி; துறை: கொற்றவள்ளை. அவனைக் கோவூர் கிழார் பாடியது. | |
| 42 | ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின், புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; தண் புனற் பூசல் அல்லது, நொந்து, 'களைக, வாழி, வளவ!' என்று, நின் முனை தரு பூசல் கனவினும் அறியாது, புலி புறங்காக்கும் குருளை போல, மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் கரும்பில் கொண்ட தேனும், பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும், வன்புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் மென்புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி, நில வரை இழிதரும் பல் யாறு போல, புலவர் எல்லாம் நின் நோக்கினரே; நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு, மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
| திணை: வாகை; துறை: அரசவாகை. அவனை இடைக்காடனார் பாடியது. | |
| 43 | நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, கால் உணவு ஆக, சுடரொடு |