| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 881 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 45... | நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் நும் ஓர் அன்ன வேந்தர்க்கு மெய்ம் மலி உவகை செய்யும் இவ் இகலே. |
| திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி. சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது. | |
| 46 | நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, விருந்தின் புன்கணோ உடையர்; கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
| திணையும் துறையும் அவை. (வஞ்சி, துணைவஞ்சி). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர்கிழார் பாடி, உய்யக் கொண்டது. | |
| 47 | வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, 'நெடிய' என்னாது சுரம் பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடி, பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண் ஆள் செல்வம் எய்திய நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே. |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) சோழன் நளங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் உய்யக் கொண்டது. | |
| 48 | கோதை மார்பின் கோதையானும், கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், மாக் கழி மலர்ந்த நெய்தலானும், கள் நாறும்மே, கானல்அம் தொண்டி; அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; அன்னோற் படர்தி ஆயின், நீயும் எம்மும் உள்ளுமோ - முது வாய் இரவல! - 'அமர் மேம்படூஉம் காலை, நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. |