| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 882 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| திணை: பாடாண் திணை; துறை: புலவராற்றுப்படை. சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது. | |
| 49 | நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடு இமிழ் பனிக் கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாட் கோதையை? - புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும், பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! |
| திணையும்
துறையும் அவை; துறை: இயன்மொழியும்
ஆம். (பாடாண்திணை, புலவராற்றுப்படை) அவனை அவர் பாடியது. (சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது) | |
| 50 | மாசு அற விசித்த வார்புறு வள்பின் மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, குருதி வேட்கை உரு கெழு முரசம் மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென வீசியோயே; வியலிடம் கமழ, இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் - வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
| திணை அது; துறை: இயன்மொழி. (வஞ்சி) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசி கீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசி கீரனார் பாடியது. | |
| 51 | நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, 'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே - நுண் பல சிதலை அரிது முயன்று |