புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   883
Zoom In NormalZoom Out

51...
 
எடுத்த
செம் புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!
 
 
திணை: வாகை; துறை: அரசவாகை.
 
பாண்டியன்   கூடகாரத்துத்  துஞ்சிய  மாறன்  வழுதியை  ஐயூர்
முடவனார் பாடியது.
 
52
 
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கானவாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை).
 
அவனை மருதன் இளநாகனார் பாடியது. (பாண்டியன் கூடகாரத்துத்
துஞ்சிய மாறன் வழுதியை)
 
53
 
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய! -
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே - 'தாழாது
செறுத்த செய்யுட் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)
 
சேரன்   மாந்தரஞ்   சேரல்   இரும்பொறையைப்   பொருந்தில்
இளங்கீரனார் பாடியது.
 
54
 
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர்