| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 885 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 56 | ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி, விண் உயர் புட் கொடி, விறல் வெய்யோனும், மணி மயில் உயரிய மாறா வென்றி, பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் - என ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல் இசை, நால்வருள்ளும், கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; வலி ஒத்தீயே, வாலியோனை; புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் அரியவும் உளவோ, நினக்கே? அதனால், இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா, யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, ஆங்கு இனிது ஒழுகுமதி! - ஓங்கு வாள் மாற! - அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் தண் கதிர் மதியம் போலவும், நின்று நிலைஇயர், உலகமொடு உடனே! |
| திணை அது; துறை: பூவை நிலை. (பாடாண்திணை) அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. (பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை) | |
| 57 | வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், நீயே, பிறர் நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் ஒன்னார் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் கடிமரம் தடிதல் ஓம்பு - நின் நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
| திணை: வஞ்சி; துறை: துணை வஞ்சி. அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் (பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை) |