புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   886
Zoom In NormalZoom Out

கண்ணனார் பாடியது.
 
58
 
நீயே, தண் புனற் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
நல் இசை முதுகுடி நடுக்கு அறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எரியும்
அரு நரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீர் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடன் நிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
கோண்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.
 
 
திணை: பாடாண் திணை; துறை: உடனிலை.
 
சோழன்   குராப்பள்ளித்   துஞ்சிய   பெருந்  திருமாவளவனும்,
பாண்டியன்   வெள்ளியம்பலத்துத்   துஞ்சிய    பெருவழுதியும்,
ஒருங்கிருந்தாரைக்   காவிரிப்பூம்பட்டினத்துக்  காரிக்கண்ணனார்
பாடியது.
 
59
 
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை,