புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   889
Zoom In NormalZoom Out

63..
 
ங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என் ஆவது கொல்தானே - கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?
 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, தொகைநிலை)
 
அவரை அக் களத்தில்  பரணர்  பாடியது.  (சேரமான் குடக்கோ
நெடுஞ்சேரலாதனும்,  சோழன்  வேற்  பல் தடக்கைப் பெருவிறற்
கிள்ளியும்)
 
64
 
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் - சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?
 
 
திணை: பாடாண்திணை; துறை: விறலியாற்றுப்படை.
 
பாண்டியன்    பல்   யாகசாலை   முதுகுடுமிப்   பெருவழுதியை
நெடும்பல்லியத்தனார் பாடியது.
 
65
 
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப,
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு,
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.
 
 
திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.
 
சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு
பொருது,   புறப்புண்  நாணி,  வடக்கிருந்தானைக் கழாத்தலையார்
பாடியது.
 
66
 
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே -
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?
 
 
திணை: வா