புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   891
Zoom In NormalZoom Out

69...
 
யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பாணாற்றுப்படை)
 
சோழன்  குளமுற்றத்துத்  துஞ்சிய  கிள்ளி  வளவனை ஆலத்தூர்
கிழார் பாடியது.
 
70
 
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கட் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு காற் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பாணாற்றுப்படை)
 
அவனைக்  கோவூர்  கிழார்  பாடியது.  (சோழன்  குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவனை)
 
71
 
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அட