| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 893 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 73... | உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழை தின் யானைக் கால் அகப்பட்ட வன் திணி நீள் முளை போல, சென்று அவண் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல் இருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
| திணையும் துறையும் அவை. (காஞ்சி, வஞ்சினக் காஞ்சி) சோழன் நலங்கிள்ளி பாட்டு. | |
| 74 | குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், 'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்; தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய, தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ, இவ் உலகத்தானே? |
| திணை: பொதுவியல்; துறை: முதுமொழிக் காஞ்சி. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு. | |
| 75 | 'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென, பால் தர வந்த பழ விறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக் குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே; மண்டு அமர் பரிக்கும் மதனுடை நோன் தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர் அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை என்றூழ் வாடு வறல் போல, நன்றும் நொய்தால் அம்ம தானே - மை அற்று, விசும்புற ஓங்கிய வெண் குடை, முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. |
| திணை அது; துறை: பொருண்மொழிக் காஞ்சி. (பொதுவியல்) சோழன் நலங்கிள்ளி பாட்டு. | |
| 76 | ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம் - திரள் அரை மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் நெடுங் கொடி |