|
அவனை அவர் பாடியது. (சோழன்
போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர்
மல்லனைப் பெருங்கோழி நாய்கன்
மகள் நக்கண்ணையார்
பாடியது).
85 என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், என்னைக்கு நாடு இஃது அன்மையானும், 'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; 'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.
திணையும் துறையும் அவை. (கைக்கிளை, பழிச்சுதல்) அவனை
அவர் பாடியது. (சோழன்
போர்வைக்கோப்
பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பெருங்கோழி
நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது).
86 சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் யாண்டு உளனோ?' என வினவுதி; என்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன்மாதோ, போர்க்களத்தானே.
திணை: வாகை; துறை: ஏறாண் முல்லை. காவற் பெண்டின் பாட்டு. 87 களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே.
திணை: தும்பை; துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
88 யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் - ஓங்கு திறல் ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், கதிர்விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் விழவு மேம்பட்ட நல் போர் முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே.
திணையும் துறையும் அவை. (தும்பை, தானை மறம்) அவனை
அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை
ஒளவையார் பாடியது).
89 'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! எறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வல் மள்ளரும் உளரே; அதா அன்று, பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், 'அது போர்' என்னும் என்னையும் உளனே.
திணையும் துறையும் அவை. (தும்பை, தானை மறம்) அவனை
அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை
ஒளவையார் பாடியது).
90 உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை வழு இல்
|