| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 897 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 90... | வன் கை, மழவர் பெரும! இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
| திணையும் துறையும் அவை. (தும்பை, தானை மறம்) அவனை அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார்). | |
| 91 | வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, ஆர் கலி நறவின், அதியர் கோமான்! போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கி, சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
| திணை: பாடாண்திணை; துறை: வாழ்த்தியல். அவனை அவர் நெல்லிப்பழம் பெற்றுப் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது). | |
| 92 | யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை என் வாய்ச் சொல்லும் அன்ன - ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே. |
| திணை: அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது). | |
| 93 | திண் பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று, அமர் கடத்தல் யாவது? - வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, 'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ - வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து அண்ணல் யானை அடு களத்து ஒழிய, அருஞ் சமம் ததைய நூறி, நீ, பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
| திணை: வாகை; துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது). | |
| 94 | ஊர்க் குறுமா |