| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 898 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 94... | க்கள் வெண் கோடு கழாஅலின், நீர்த் துறை படியும் பெருங் களிறு போல இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் துன் அருங் கடாஅம் போல இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரச வாகை) அவனை அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது). | |
| 95 | இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, கொல் துறைக் குற்றிலமாதோ - என்றும் உண்டாயின் பதம் கொடுத்து, இல்லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. |
| திணை: பாடாண்திணை; துறை: வாள் மங்கலம். அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது. (அதியமான்) | |
| 96 | அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், திரண்டு நீடு தடக்கை என்னை இளையோற்கு இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே 'விழவின்று ஆயினும், படு பதம் பிழையாது, மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளுமோ?' என, உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
| திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண் திணை) அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது. (அதியமானை ஒளவையார் பாடியது) | |
| 97 | போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின், சுரை தழீஇய இருங் காழொடு மடை கலங்கி நிலை திரிந்தனவே; களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் பொலம் பைந் தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலந் தும்பைக் கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன்னே, ஆயிடை, உடன் |