| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 899 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 97... | றோர் உய்தல் யாவது? 'தடந்தாள், பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் சொல்லவும் தேறீர்ஆயின், மெல் இயல், கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதி, குறுந் தொடி மகளிர் தோள் விடல் இறும் பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது. (ஒளவையார்) | |
| 98 | முனைத் தெவ்வர் முரண் அவியப் பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர் மதிற் கதவம் எழுச் செல்லவும், பிணன் அழுங்கக் களன் உழக்கிச் செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நல் மாச் செலக் கண்டவர் கவை முள்ளின் புழை அடைப்பவும், மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் இரங்க விளிவது கொல்லோ - வரம்பு அணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனி, பெரும் புனற் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
| திணை: வாகை;
துறை: அரசவாகை; திணை: வஞ்சியும், துறை: கொற்ற வள்ளையும் ஆம். அவனை அவர் பாடியது. (அதியாமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது). | |
| 99 | அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீர் அக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, ஈகை அம் கழற் கால், இரும் பனம் புடையல், பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் பரணன் பாடினன் மற்கொல் - மற்று நீ முரண் மிகு கோவலூர் நூறி, நின் அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
| திணையும் துறையும் அவை. (வாகை, வஞ்சி, அரசவாகை; கொற்றவள்ளை) அவன் |