புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   901
Zoom In NormalZoom Out

103... தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! 
 

திணை அது; துறை: விறலியாற்றுப்படை. (பாடாண்திணை)
 
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

104 போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
நுண் பல் கருமம் நினையாது,
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. 
 

திணை: வாகை; துறை: அரசவாகை.
 
அவனை  அவர்  பாடியது.  (அதியமான்  நெடுமான்  அஞ்சியை
ஒளவையார் பாடியது)

105  சேயிழை பெறுகுவை - வாள் நுதல் விறலி!
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக,
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயற்
பாரி வேள்பால் பாடினை செலினே. 
 

திணை: பாடாண்திணை; துறை: விறலியாற்றுப்படை.
 
வேள்பாரியைக் கபிலர் பாடியது.
  

106  நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே. 
 

திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது).

107  'பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. 
 

திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது).

108  குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. 
 

திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது).

109  அளிதோதானே, பாரியது பறம்பே! -
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொ