| 109... டி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, மரம் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. திணை: நொச்சி; துறை: மகள் மறுத்தல். அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது). 110 கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே; குன்றும் உண்டு - நீர் பாடினிர் செலினே. திணையும் துறையும் அவை. (நொச்சி, மகள் மறுத்தல்) மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது. (கபிலர்) 111 அளிதோ தானே, பேர் இருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. திணையும் துறையும் அவை. (நொச்சி, மகள் மறுத்தல்) அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது) 112 அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. பாரி மகளிர் பாடியது. 113 மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊரன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, நட்டனை மன்னோ, முன்னே; இனியே, பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் சேறும் - வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) பாரி மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டு போவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது. 114 ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற - களிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல். வார் அசும்பு ஒழுகும் |