புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   903
Zoom In NormalZoom Out

114...
 
முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
பாரி  மகளிரைக்  கொண்டுபோம்  கபிலர்  பறம்பு நோக்கி நின்று
பாடியது).
 
115
 
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கட் தேறல்,
கல் அலைத்து ஒழுகும் மன்னே! - பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே.
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது)
 
116
 
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புல் மூசு கவலைய முள் மிடை வேலி,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா, காலை! -
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும்,
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்,
கலையும் கொள்ளாவாக, பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணுவோரே.
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது).
 
117
 
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயலகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே -
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசில் முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது).
 
118
 
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெள் நீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்