| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 904 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 118... | பின் தேர்வண் பாரி தண் பறம்பு நாடே! |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது). | |
| 119 | கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ - நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, பணை கெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது). | |
| 120 | வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, பூழி மயங்கப் பல உழுது, வித்தி, பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, வாலிதின் விளைந்த புது வரகு அரிய, தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல். புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு பெருந்தோள் தாலம் பூசல் மேவர, வருந்தா யாணர்த்து; நந்தும் கொல்லோ - இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் பாடி ஆனாப் பண்பின் பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (வேள்பாரியைக் கபிலர் பாடியது). | |
| 121 | ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் பலரும் வருவர், பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே; மாவண் தோன்றல்! அது நற்கு அறிந்தனை ஆயின், பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
| திணை: அது; துறை: பொருண்மொழிக் காஞ்சி. (பொதுவியல்) மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது. |