| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 908 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 133 | மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; காண்டல் வேண்டினை ஆயின் - மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரை வளி உளர, கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! |
| திணை அது; துறை விறலியாற்றுப்படை. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது). | |
| 134 | 'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; பிறரும் சான்றோர் சென்ற நெறி என, ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. |
| திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (ஆயை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.) | |
| 135 | கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடுவரை, அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், வளைக் கை விறலி என் பின்னள் ஆக, பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, வந்தனென் எந்தை! யானே: என்றும், மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடு கறை அடி யானை இரியல் போக்கும் மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! - களிறும் அன்றே; மாவும் அன்றே; ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், தமது எனத் தொடுக்குவர் ஆயின், 'எமது' எனப் பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை - வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
| திணை அது; துறை: பரிசில் துறை. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (ஆயை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது). | |
| 136 | யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப இழை வலந்த பல் துன்னத்து இடைப் புரை பற்றி, பிணி விடாஅ ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ? உண்ணாமையின் ஊன் வாடி, |