புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   911
Zoom In NormalZoom Out

142...
 
படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
 
 
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
அவனை  அவர்  பாடியது.  (வையாவிக் கோப்பெரும் பேகனைப்
பரணர் பாடியது,)
 
143
 
மலை வான் கொள்க! என, உயர் பலி தூஉய்,
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண் மாறிய உவகையர், சாரற்
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்
கை வள் ஈகைக் கடு மான் பேக!
யார் கொல் அளியள் தானே - நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென,
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்,
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப, விம்மி,
குழல் இனைவது போல் அழுதனள், பெரிதே?
 
 
திணை: பெருந்திணை; துறை: குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
 
அவனால்  துறக்கப்பட்ட  கண்ணகி காரணமாக, அவனைக் கபிலர்
பாடியது. (பேகனால், வையாவிக் கோப்பெரும்பேகனைக்)
 
144
 
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர,
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,
இனைதல் ஆனாளாக, 'இளையோய்!
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என,
யாம் தற் தொழுதனம் வினவ, காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப - 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.'
 
 
திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி, தாபதநிலை)
 
அவனை அவள்  காரணமாகப் பரணர் பாடியது. (வையாவிக்கோப்
பெரும்பேகனைக் கண்ணகி).
 
145
 
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி,
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை,
கடாஅ யானைக் கலி மான் பேக!
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே;
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என,
இஃது யாம் இரந்த பரிசில்; அஃது இருளின்,
இன மணி நெடுந் தேர் ஏறி,