| 145... இன்னாது உறைவி அரும் படர் களைமே!
திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி, தாபதநிலை) அவனை
அவள் காரணமாக அவர் பாடியது.
(வையாவிக்
கோப்பெரும் பேகனைக் கண்ணகி காரணமாகப் பரணர்
பாடியது). 146 அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல நல் நாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின், குரிசில்! நீ நல்காமையின் நைவரச் சாஅய், அருந் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, ஒலி மென் கூந்தற் கமழ் புகை கொளீஇ, தண் கமழ் கோதை புனைய, வண் பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!
திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி, தாபதநிலை) அவனை
அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது. (வையாவிக்
கோப்பெரும் பேகனைக் கண்ணகி காரணமாக
அரிசில் கிழார்
பாடியது). 147 கல் முழை அருவரிப் பல் மலை நீந்தி, சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, கார் வான் இன் உறை தமியள் கேளா, நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, புது மலர் கஞல, இன்று பெயரின், அதுமன், எம் பரிசில் - ஆவியர் கோவே!
திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி, தாபதநிலை) அவள்
காரணமாக அவனைப் பெருங்குன்றூர்
கிழார் பாடியது.
(வையாவிக் கோப்பெரும் பேகனைக் கண்ணகி காரணமாகப்) 148 கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே.
திணை: பாடாண்திணை; துறை: பரிசில் துறை. கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது. 149 நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் மாலை மருதம் பண்ணி, காலை கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, வரவு எமர் மறந்தனர் - அது நீ புரவுக் கடன் பூண்ட வண்மை யானே.
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) அவனை
அவர் பாடியது. (கண்டீரக் கோப் பெருநள்ளியை
வன்பரணர் பாடியது.) 150 கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழற் கால், வான் கதிர்த் திருமணி விளங்கும் சென்னி, செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |