| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 914 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 152... | அம் பகட்டு மார்பின், சாரல் அருவிப் பய மலைக் கிழவன், ஓரிகொல்லோ? அல்லன்கொல்லோ? பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; பதலை ஒருகண் பையென இயக்குமின்; மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, 'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, தன் மலைப் பிறந்த தாஇல் நன் பொன், பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, சுரத்திடை நல்கியோனே - விடர்ச் சிமை ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
| திணை அது; துறை: பரிசில்விடை. (பாடாண்திணை) வல்வில்ஓரியை வன் பரணர் பாடியது. | |
| 153 | மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, அடு போர் ஆனா, ஆதன் ஓரி மாரி வண் கொடை காணிய, நன்றும் சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, பசியாராகல் மாறுகொல் - விசி பிணிக் கூடு கொள் இன் இயம் கறங்க, ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
| திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. வல்வில் ஓரியை வன்பரணர் பாடியது. | |
| 154 | திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், அரசர் உழையராகவும், புரை தபு வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; 'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது நல்கினும், நல்காய் ஆயி |