| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 915 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 154... | னும், வெல் போர் எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண் பல இழிதரும் அருவி நின் கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. |
| திணை அது; துறை: பரிசில் துறை. (பாடாண்திணை) கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது. | |
| 155 | வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, 'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, கிளக்கும், பாண! - கேள், இனி - நயத்தின் பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர் தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண் பெருங் கானத்துக் கிழவன் தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
| திணை அது; துறை: பாணாற்றுப்படை. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (கொண்கானங்கிழானை மோசிகீரனான் பாடியது.) | |
| 156 | ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று நிறை அருந் தானை வேந்தரைத் திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
| திணை அது; துறை: இயன் மொழி. (பாடாண்திணை) அவனை அவர் பாடியது. (கொண்கானங்கிழானை மோசிகீரனான் பாடியது). | |
| 157 | தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், பிறர் கையறவு தான் நாணுதலும், படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், கோடல் கண்ணி, குறவர் பெருமகன் - ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, கட்சி காணாக் கடமான் நல் ஏறு மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் பெருங் கல் நாடன் - எம் ஏறைக்குத் தகுமே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது. | |
| 158 | முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், அரசுடன் பொருத |