புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   917
Zoom In NormalZoom Out

159..
 
மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப - கானவர்
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப -
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி ஆயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர் வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் - விறற் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.
 
 
திணை அது; துறை: பரிசில் கடாநிலை.
 
அவனை  அவர்   பாடியது.   (குமணனைப்  பெருஞ்சித்திரனார்
பாடியது.)
 
160
 
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புற் கானம் குழைப்ப, கல்லென
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு,
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை