| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 918 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 160... | அவிழ் புகுவு அறியாது ஆகலின், வாடிய நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், மதி சேர் நாள் மீன் போல, நவின்ற சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, "கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், கூழும் சோறும் கடைஇ, ஊழின் உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் வினவல் ஆனாளாகி, நனவின் அல்லல் உழப்போள் மல்லள் சிறப்ப, செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை நீர் சூழ் நிலவரை உயர, நின் சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை) அவனை அவர் பாடியது. (குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.) | |
| 161 | நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, பெருமலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, வள மழை மாறிய என்றூழ்க் காலை, மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின், 'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, இற்றை நாளொடும் யாண்டு தலைப் பெயர' எனக் கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் தாள் படு செல்வம் காண்தொறும் மருள, பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, செலல் நசைஇ உற்றனென் - விறல் மிகு குருசில்! இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் வண்மையின் |