| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 920 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 164... | ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை சுவைத் தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, நிற் படர்ந்திசினே - நல் போர்க் குமண! - என் நிலை அறிந்தனை ஆயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென் - அடுக்கிய பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், மண் அமை முழவின், வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. |
| திணை அது; துறை: பரிசில் கடாநிலை. (பாடாண்திணை) தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. | |
| 165 | மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் பாடி நின்றனெனாக, 'கொன்னே பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; ஆடு மலி உவகையொடு வருவல், ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
| திணை அது; துறை: பரிசில்விடை. (பாடாண்திணை) தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங்குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது. | |
| 166 | நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் வாய் போகாது, ஒன்று புரிந்த ஈர் - இரண்டின், ஆறு உணர்ந்த ஒருமுது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார், |