புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   921
Zoom In NormalZoom Out

166...
 
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடி,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
சில சொல்லின், பல கூந்தல், நின்
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப;
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்ஏழின் இடம் முட்டாது,
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே! சூடாஅது
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின்,
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்
தண் புனற் படப்பை எம் ஊர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;
செல்வல் அத்தை, யானே; செல்லாது,
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலம் மிசையானே?
 
 
திணை: வாகை; துறை: பார்ப்பனவாகை.
 
சோணாட்டுப்     பூஞ்சாற்றூர்ப்     பார்ப்பான்     கௌணியன்
விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
 
167
 
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே:
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு,
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே:
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்;
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க்
கழல் புனை திருந்து அழக் கடு மான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.
 
 
திணை அது; துறை: அரசவாகை. (வாகை)
 
ஏனாதி   திருக்கிள்ளியைக்   கோனாட்டு   எறிச்சிலூர்  மாடலன்
மதுரைக் குமரனார் பாடியது.
 
168
 
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வ