| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 923 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 170... | சிலைக்கும் வன் கண் கடுந் துடி புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் மலை கெழு நாடன், கூர் வேல் பிட்டன், குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே சிறு கண் யானை வெண் கோடு பயந்த ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, நார் பிழிக் கொண்ட வெங் கட் தேறல் பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொரூஉம் உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
| திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம். அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. | |
| 171 | இன்று செலினும் தருமே; சிறு வரை நின்று செலினும் தருமே; பின்னும், 'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப அருந் தொழில் முடியரோ, திருந்து வேற் கொற்றன்; இன மலி கதச் சேக் களனொடு வேண்டினும், களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. அன்னன் ஆகலின், எந்தை உள் அடி முள்ளும் நோவ உறாற்கதில்ல! ஈவோர் அரிய இவ் உலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
| திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. (பிட்டங்கொற்றனைக்) | |
| 172 | ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் பரியல் வேண்டா; வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் வன் புல நாடன், வய மான் பிட்டன்; ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை மா வண் ஈகைக் கோதையும், மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது. (பிட்டங் கொற்றனை) | |
| 173 | யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |