| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 924 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
173... | பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) | |
|
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது. | |
| 174 | அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, அரசு இழந்திருந்த அல்லற்காலை, முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, பொய்யா நாவின் கபிலன் பாடிய, மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, அரு வழி இருந்த பெரு விறல் வளவன் மதி மருள் வெண்குடை காட்டி, அக்குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலம் தீர, நீ தோன்றினையே - நிரைத் தார் அண்ணல்! கல் கண் பொடிய, கானம் வெம்ப, மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, கோடை நீடிய பைது அறு காலை, இரு நிலம் நெளிய ஈண்டி, உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை: வாகை; துறை: அரசவாகை. | |
|
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து | |
|
நப்பசலையார் பாடியது. |