புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   927
Zoom In NormalZoom Out

181
 
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும்
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை,
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை,
வலாஅரோனே, வாய் வாட் பண்ணன்;
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே - சென்று, அவன்
பகைப் புலம் படரா அளவை, நின்
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.
 
 
திணையும்   துறையும்  அவை.   (வாகை, வல்லாண்முல்லை,
 
பாணாற்றுப்படை) வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு
 
முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
 
182
 
உண்டால் அம்ம, இவ் உலகம் - இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
 
 
திணை:    பொதுவியல்;  துறை:  பொருண்மொழிக்  காஞ்சி.
 
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டு.
 
 
 
183
 
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே;
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்,
'மூத்தோன் வருக' என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.
 
 
திணையும்  துறையும்   அவை.   (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.
 
184
 
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,