புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   928
Zoom In NormalZoom Out

184... கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

திணை:   பாடாண்திணை;   துறை:      செவியறிவுறூஉ.

பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார்
பாடியது.

185  கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக் கூழ் அள்ளற் பட்டு,
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.

திணை:  பொதுவியல்;  துறை:  பொருண்மொழிக் காஞ்சி.

தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.

186  நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) மோசிகீரனார் பாடியது.

187  நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலாகொன்றோ; மிசையாகொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) ஒளவையார் பாடியது.

188 படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை - தாம் வாழு நாளே.

திணையும்   துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

189  தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

திணையும்  துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

190 விளை பதச் சீறிடம்