| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 933 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
201... | கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) | |
|
பாரி மகளிரை இருங்கோவேளிடம் கொண்டு சென்ற கபிலர் பாடியது. | |
| 202 | வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட கட்சி காணாக் கடமா நல் ஏறு கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, கடிய கதழும் நெடு வரைப் படப்பை வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, இரு பால் பெயரிய உருகெழு மூதூர், கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: நுந்தை தாயம் நிறைவுற எய்திய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்! எவ்விதொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் கை வண் பாரி மகளிர்' என்ற என் தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் இரும்புலி வரிப் புறம் கடுக்கும் பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) | |
|
இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது. | |
| 203 | 'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், 'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; 'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், 'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்! இல்லது நிரப்பல் ஆற்றாதோரிலும், உள்ளி வருநர் நசை இழப்போரே; அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) | |
|
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி |