| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 934 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
பசுங்குடையார் பாடியது. | |
| 204 | 'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், 'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; 'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், 'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; தெண்நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும், உண் நீர் மருங்கின் அதர்பல ஆகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் புலவேன் - வாழியர், ஓரி! விசும்பில் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே: |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) | |
|
வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடியது. | |
| 205 | முற்றிய திருவின் மூவர் ஆயினும், பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, வெள் வீ வேலிக் கோடைப் பொருந! முறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கதநாய், நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, கடல்வயின் குழீஇய அண்ணல்அம் கொண்மூ நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மற் களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) | |
|
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. | |
| 206 | வாயிலோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு |