| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 935 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 206... | அடையா வாயிலோயே! கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், காவினம் கலனே; சுருக்கினெம் கலப்பை; மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே - எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது. | |
| 207 | எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, பருகு அன்ன வேட்கை இல்வழி, அருகில் கண்டும் அறியார் போல, அகம் நக வாரா முகன் அழி பரிசில் தாள் இலாளர் வேளார் அல்லர்? வருக என வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம்; பேணுநர் பலரே; மீளி முன்பின் ஆளி போல, உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென நோவாதோன் வயின் திரங்கி, வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இளவெளிமானை, பரிசில் கொடு என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது,பெருஞ்சித்திரனார் பாடியது. | |
| 208 | 'குன்றும் மலையும் பல பின் ஒழிய வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, ஈங்கனம் செல்க, தான்' என, என்னை யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, தினை அனைத்து ஆயினும், இனிது - அவர் துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் துறை) அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்ற பெருஞ்சித்திரனாரை, அவன் நேரில் வந்து காணாது 'இது கொண்டு செல்க!' என்றுகொடுத்த பரிசிலை ஏற்காமல் பாடியது. | |
| 209 | பொய்கை நாரை போர்வில் சேக்கும் நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை அரியல் மாந்தி, தெண்கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! பல் |