| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 936 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
209... | கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, பெருமலை விடரகம் சிலம்ப முன்னி, பழனுடைப் பெருமரம் தீர்ந்தென, கையற்று, பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லன்; நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் குறு நணி காண்குவதாக - நாளும், நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தேம் மொழி, தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் பெரு வரை அன்ன மார்பின், செரு வெஞ் சேஎய்! நின்மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை: பரிசில் கடாநிலை. (பாடாண்திணை) | |
|
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. | |
| 210 | மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, நும்மனோரும் மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி உயிர் சிறிது உடையள் ஆயின், எம்வயின் உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், 'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் பிறன் ஆயினள்கொல்? இறீஇயர், என் உயிர்!' என நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: அவல நெஞ்சமொடு செல்வல் - நிற் கறுத்தோர் அருங் கடி முனை அரண் போலப் பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை) | |
|
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் | |
|
பெருங்குன்றூர் கிழார் பாடியது. | |
| 211 | அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு அணங்குடை அரவின் அருந் தலை துமிய, நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, குன்று தூவ எறியும் அரவம் போல, முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், 'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, கொள் |