புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   937
Zoom In NormalZoom Out

211...
 
ளா மாந்தர் கொடுமை கூற, நின்
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள்
கை உள்ளது போல் காட்டி, வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்தி,
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடுகொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே - வைகலும்,
வல்சி இன்மையின் வயின் வயின் மாறி,
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்,
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந்த என் வாண்நுதற் படர்ந்தே.
 
 
திணையும்  துறையும்  அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை)
 
அவனை அவர் பாடியது.
 
(சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.)
 
212
 
'நும்கோ யார்?' என வினவின், எம்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் -
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.
 
 
திணை   அது;   துறை:   இயன்மொழி.     (பாடாண்திணை)
 
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 
213
 
மண்டு அமர் அட்ட மதனுடை நோன்தாள்,
வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்,
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்;
நினையும் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடு மான் தோன்றல்!
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே:
அதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே!
நின்ற