| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 939 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| துறை: இயன்மொழி. | |
| கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு 'அவர் வருவார்' என்று சொல்லியது. | |
| 216 | 'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; தன் பெயர் கிளக்கும் காலை, 'என் பெயர் பேதைச் சோழன்' என்றும், சிறந்த காதற் கிழமையும் உடையன்; அதன் தலை, இன்னது ஓர் காலை நில்லலன்; இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) துணைவஞ்சி) அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு | |
| இடம் ஒழிக்க!' என்றது. | |
| | |
| 217 | நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; 'வருவன்' என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் என் ஆவதுகொல்? அளியது தானே! |
| திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. | |
| அவன் வடக்கிருந்தானிடம் சென்ற பிசிராந்தையாரைக் | |
| கண்டு பொத்தியார் பாடியது. | |
| | |
| 218 | பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மா, மலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, அரு விலை நன் கலம் அமைக்கும் காலை, ஒரு வழித் தோன்றியாங்கு - என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
| திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) பிசிராந் |