புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   940
Zoom In NormalZoom Out

தையார் வடக்கிருந்த போது கண்ணகனார் பாடியது.  

219  உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே -
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே.  

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது. 

220 பெருஞ்சோறு பயந்து, பல் யாண்டு புரந்த
பெருங் களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு,
கலங்கினென் அல்லனோ, யானே - பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?  

திணையும்  துறையும்  அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அவன் வடக்கிருந்தானிடம் சென்று மீண்டு வந்து உறையூர் 

கண்ட பொத்தியார் அழுது பாடியது. 

221  பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத் தக்கோனை,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ - வாய்மொழிப் புலவீர்! -
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை ஆடி,
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே.  

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அவன் நடுகற் கண்டு அவர் பாடியது. 

222 'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என,
என் இவண் ஒழித்த அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என் இடம் யாது? - மற்று இசை வெய்யோயே!  

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அவனை,  தன்  மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, 

பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று கூறியது.  

223  பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி,
தலைப் போகன்மையின் சிறு வழி மடங்கி,
நிலை பெறு நடுகல் ஆகியக்கண்ணும்,
இடம் கொ