| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 941 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 223... | டுத்து அளிப்ப, மன்றஉடம்போடு - இன் உயிர் விரும்பும் கிழமைத் தொல் நட்புடையார் தம்முழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த | |
|
பொத்தியார் பாடியது. | |
| 224 | அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, இரு பாண் ஒக்கற் கடும்பு புரந்ததூஉம்; அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, பருதி உருவின் பல் படைப் புரிசை, எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; அறிந்தோன் மற்ற அறிவுடையாளன்: இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, பெரு வறங் கூர்ந்த வேனிற் காலை, பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து கட்டு அழித்த வேங்கையின், மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது. | |
| 225 | தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர, நில மலர் வையத்து வல முறை வளைஇ, வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, 'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி; கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, முள்ளுடை வியன் காட்டதுவே - 'நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?' என, இன் இசைப் பறையொடு வென்றி நுவல, தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, ஞாலங் காவலர் கடைத்தலை, காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல்,
கையறுநிலை) | |
|
சோழன் நலங் |