புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   942
Zoom In NormalZoom Out

கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
 
226
 
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வு இன்றுமாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே.
 
 
திணையும்  துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
சோழன்   குளமுற்றத்துத்  துஞ்சிய   கிள்ளி  வளவனை
 
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 
227
 
நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயற் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
முனையோற் கொண்டனை ஆயின்,
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 
அவனை ஆடுதுறை  மாசாத்தனார்  பாடியது. (சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை)
 
228
 
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் -
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் -
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
 
 
திணை: அது; துறை: