| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 943 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
ஆனந்தப்பையுள். (பொதுவியல்) அவனை ஐயூர் முடவனார் | |
|
பாடியது. (சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை) | |
| 229 | ஆடு இயல் அழல் குட்டத்து ஆர் இருள் அரை இரவில், முடப் பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம் காய, பங்குனி உயர் அழுவத்து, தலை நாள்மீன் நிலை திரிய, நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, தொல் நாள்மீன் துறை படிய, பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, அளக்கர்த் திணை விளக்காகக் கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; அது கண்டு யாமும் பிறரும் பல்வேறு இரவலர், 'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் நோய் இலன் ஆயின் நன்று மன் தில்' என அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; மைந்துடை யானை கைவைத்து உறங்கவும், திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், கால் இயற் கலி மாக் கதி இல வைகவும், மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி, தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ - பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை, மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) | |
|
கோச்சேரமான் யானைக் கட்
சேய் மாந்தரஞ்சேரல் | |
|
இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது. | |
| 230 | கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், களம் மலி குப்பை காப்பு இல வைகவும், விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், பொய்யா எழினி பொருது களம் சேர - ஈன்றோள் நீத்த குழவி போல, தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ் |