| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 945 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
235... | எமக்கு ஈயும்; மன்னே! பெரிய கட் பெறினே, யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே! பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! நரந்தம் நாறும் தன் கையால், புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! அருந் தலை இரும்பாணர் அகல் மண்டைத் துளைஉரீஇ, இரப்போர் கையுளும் போகி, புரப்போர் புன்கண் பாவை சோர, அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று, அவன் அரு நிறத்து இயங்கிய வேலே! ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ? இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. | |
| | |
| 236 | கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் மலை கெழு நாட! மா வண் பாரி! கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் புலந்தனை ஆகுவை - புரந்த ஆண்டே பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, இனையை ஆதலின் நினக்கு மற்று யான் மேயினேன் அன்மையானே; ஆயினும், இம்மை போலக் காட்டி, உம்மை இடை இல் காட்சி நின்னோடு உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை: கையறுநிலை. (பொதுவியல்) | |
|
வேள்பாரி துஞ்சிய வழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது. | |
| 237 | 'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, பாடி நின்ற பசி நாட்கண்ணே, 'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என நச்சி இருந்த நசை பழுதாக, அட்ட குழிசி அழற் பயந்தா அங்கு, 'அளியர்தாமே ஆர்க' என்னா அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, ஊழின் உருப்ப எருக்கிய |