| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 946 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
237... | மகளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற, முது வாய் ஒக்கற் பரிசிலர் இரங்க, கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, வெள்வேல் விடலை சென்று மாய்ந்தனனே: ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, நனியுடைப் பரிசில் தருகம், எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இளவெளிமான் | |
|
சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது. | |
| 238 | கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு முன்னினனே, கட்காமுறுநன்; தொடி கழி மகளிரின் தொல்கவின் வாடி, பாடுநர் கடும்பும் பையென்றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள் இல், வரைபோல், யானையும் மருப்பு இழந்தனவே; வெந்திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என் ஆகுவர் கொல், என் துன்னியோரே? மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின், ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஓராங்குக் கண் இல் ஊமன் கடற் பட்டாங்கு, வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, அவல மறு சுழி மறுகலின், தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது. | |
| | |
| 239 | தொடியுடைய தோள் மணந்தனன்; கடிகாவில் பூச் சூடினன்; தண் கமழும் சாந்து நீவினன்; செற்றோரை வழி தபுத்தனன்; நட்டோரை உயர்பு கூறினன்; 'வலியர்' என, வழிமொழியலன்; 'மெலியர்' என மீக்கூறலன்; பிறரைத் தான் இரப்பு அறியலன்; இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன்; பெயர்படை புறங்கண்டனன்; கடும் பரிய மாக் கடவினன்; நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; ஓங்கு இயல |