| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 948 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
243... | நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்து மணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, இரும் இடை மிடைந்த சில சொற் பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே? |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது. | |
| 244 | பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா; விறலியர் முன்கையும் தொடியின் பொலியா; இரவல் மாக்களும்... ... ... ... ... ... ... ... ... ... |
| 245 | யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே, உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, ஒள் அழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே! |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) | |
|
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் | |
|
பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு. | |
| | |
| 246 | பல் சான்றீரே! பல் சான்றீரே! 'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், வெள் எட் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆக, பரற் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ; பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுகதில்ல; எமக்கு எம் பெருந் தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
|
திணை: அது; துறை: |