புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   949
Zoom In NormalZoom Out

ஆனந்தப்பையுள்.   (பொதுவியல்)   பூதபாண்டியன்   தேவி 

பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது.
 

247
 
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து,
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ,
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி,
தெருமரும் அம்ம தானே - தன் கொழுநன்
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! 
 
திணையும் துறையும் அவை.  (பொதுவியல்,   ஆனந்தப்பையுள்) 

அவள்  தீப்  பாய்வாளைக்  கண்டு  மதுரைப்   பேராலவாயார்
சொல்லியது.
 

248
 
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! -
இளையமாகத் தழை ஆயினவே;
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது
மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. 
 
திணை:   அது;   துறை:  தாபத நிலை. (பொதுவியல்) ஒக்கூர் 

மாசாத்தனார் பாடியது.
 

249
 
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக... வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) 

...தும்பி சேர்கீரனார் பாடியது.
 

250
 
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் -