புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   950
Zoom In NormalZoom Out

250... வளம் கெழு திருநகர்! -
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே. 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) 

தாயங்கண்ணியார் பாடியது. 

251 ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந்தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! 

திணை: வாகை; துறை: தாபத வாகை. மாற்பித்தியார் பாடியது. 

252 கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! 

திணையும் துறையும் அவை. (வாகை, தாபத வாகை) அவனை 

அவர் பாடியது. (மாறப்பித்தியார்) 

253 என் திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப,
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல்
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங் கை ஓச்சி,
இளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! 

திணை: பொதுவியல்; துறை: முதுபாலை. குளம்பாதாயனார் 

பாடியது. 

254 இளையரும் முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளை இல் வறுங்கை ஓச்சி, கிளையுள்,
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று,
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு' என நாளும்
ஆனா புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! 

திணையும் துறையும்  அவை.  (பொதுவியல், முதுபாலை) 

கயமனார் பாடியது. 

255 'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்க