புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   951
Zoom In NormalZoom Out

255...
 
வல்லேன்;
என்போல்பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!
நிரை வளை முன் கை பற்றி -
வரை நிழல் சேர்கம் - நடத்திசின் சிறிதே!
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுபாலை)
 
வன்பரணர் பாடியது.
 
 
 
256
 
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல, தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
 
 
திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுபாலை)
 
பாடியோர் பெயர் காணப்படவில்லை.
 
257
 
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால்,
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்,
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன்தானே? தேரின்
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக்
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை,
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பையென எண்ணி,
சிலையின் மாற்றியோனே; அவைதாம்
மிகப் பலவாயினும், என் ஆம் - எனைத்தும்
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே?
 
 
திணை: வெட்சி; துறை: உண்டாட்டு.
 
 
 
258
 
முட் கால் காரை முது பழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங் கை விற்புரம் திமிரி,
புலம் புக்கனனே, புல் அணற் காளை;
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி, முது கட்சாடி
ஆ தரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு அக் கள் வெய்யோனே.